கோவை : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி மஞ்சுளா ( வயது 64 )இவர் கண் பரிசோதனை செய்வதற்காக ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்தார். காந்திபுரத்தில் இருந்து ஆர் எஸ் புரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார். கண் மருத்துமனை பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர். இது குறித்து மஞ்சுளா ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகிறார்..
கண் மருத்துவமனைக்குச் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு..!
