பெண் வேடம் அணிந்து லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேர் கைது.!!

கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் கடந்த 22-ந் தேதி தங்கம் ( வயது 48 ) என்ற லாரி டிரைவர் தனது லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு இறங்கினார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் மறைந்து இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி டிரைவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2500 ரூபாயை வழிப்பறி செய்தனர். அதற்குப் பின்னால் வந்த லாரி டிரைவரிடமும் இதேபோல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்தனர்.. இது தொடர்பாக லாரி டிரைவர் தங்கம் கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழிப்பறி வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி தீவிர புலன் விசாணை மேற்கொண்டதில் பெரள்ளாச்சி கோட்டூர் பகுதி சேர்ந்த ஜெகதீஷ் மகன் சபரீஷ் (வயது 25) சண்முகம் மகன் குரு பிரகாஷ் (வயது 21) கிட்டுசாமி மகன் நாகராஜ்@நவீன் (வயது 26) ஆனந்த் மகன் சூர்யா (வயது 19 )மற்றும் கருப்புசாமி மகன் சிவா(வயது 24) ஆகியோர்கள் மேற்படி வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதை யடுத்து தனிப்படை காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..