புதுடெல்லி: அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு அம்மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்டப்பேரவை பதவிக்காலம் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகின்றது. தேர்தல் நடத்தப்படும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதில் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டத்திலோ அல்லது நீண்ட காலமாக பணியாற்றும் இடங்களிலோ நியமிக்கப்படுவதில்லை என்ற கொள்கையை ஆணையம் பின்பற்றி வருகின்றது. எனவே தேர்தல்களுடன் நேரடியாக தொடர்புடைய எந்த அதிகாரியும் அவரது சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தால் தற்போதைய மாவட்டத்தில்(வருவாய் மாவட்டத்தில்) பணியை தொடர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..