கோவை காட்டூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரகுமார் (வயது 47) வியாபாரி. கடந்த 6 – ந்தேதி இவரது வீட்டின் முன் வைத்திருந்த ஸ்கூட்டரை யாரோ திருடி சென்று விட்டனர். இதேபோல சுந்தராபுரம் செங்கோட்டையன் காலனி சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 42) தச்சுதொழிலாளி. கடந்த 6-ந்தேதி சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பார் அருகே நிறுத்தி இருந்த இவரது பைக்கை யாரோ திருடி விட்டனர். குனியமுத்தூர் அம்மன் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் யோகேந்திர குமார் ( வயது 35 )நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக்கை யாரோ திருடி விட்டனர். சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 70) அங்குள்ள விநாயகர் கோவில் முன் நிறுத்தி இருந்த இவரது பைக்கை யாரோ திருடி விட்டனர்.கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், காந்திஜி நகரை சேர்ந்தவர் தனக்கோடி ( வயது 49 )இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை யாரோ திருடி விட்டனர் . இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவையில் ஒரே நாளில் 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.