பட்டாபிராம் அருகே 10 இரும்பு ஜாக்கிகள் திருடிய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பட்டாபிராம் அடுத்த கருணாகரச்சேரி அமுதூர்மேடு பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசின் சார்பில் தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகள், இரும்பு ஜாக்கிகள், மணல், கருங்கல் ஆகியவை அந்த இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கட்டுமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 10 இரும்பு ஜாக்கிகள் திருடப்பட்டது. கண்டு ஒப்பந்ததாரர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி ஒப்பந்தக்காரரிடம் வேலை செய்யும் இன்ஜினியர் கோபால கிருஷ்ணன் பட்டாபிராம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் இரும்பு ஜாக்கிகளை திருடிய தென்காசியில் சேர்ந்த சரவணன் (வயது 19) மன்னார்குடியைச் சேர்ந்த மற்றொரு சரவணன் (வயது 19) அருண (வயது 20) பாலகணேஷ் (வயது 26) உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 இரும்பு ஜாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..