கோவை ராமநாதபுரம், சுப்ரமணியன் வீதியைசேர்ந்தவர் எஸ். கே பிரியதர்ஷினி ( வயது 36) இவருக்கும் ஈரோடு தில்லை நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மோகனசுந்தரம் (வயது 38) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்கள் ஈரோட்டில் வசித்து வந்தனர். கணவர் மோகன் சுந்தரம் வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் பிரியதர்ஷினிக்கு திருமணத்தின் போது அவரது பெற்றோர்கள் 250 பவுன் நகையும், பிஎம்டபிள்யூ காரும் வரதட்சணையாக வழங்கினார்கள்.திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மோகனசுந்தரமும் அவரது பெற்றோர்களும், அவர் அணிந்திருந்த நகைகளை வாங்கிக் வைத்து கொண்டனர்.மேலும் 50 பவுன் நகையும் ,ஜாக்குவார் காரும் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.இது குறித்து பிரியதர்ஷினி கோவை கிழக்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் வித்யா விசாரணை நடத்தி பிரியதர்ஷினியின் கணவர் மோகன சுந்தர் (வயது 38) மாமனார் பன்னீர் செல்வம்( வயது 65) மாமியார் ராஜாமணி ( வயது 57 ) மோகனசுந்தரத்தின் அண்ணன் சக்திவேல்( வயது 40 )ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.