கோவையில் 500 போதை மாத்திரைகள், ஊசி பறிமுதல் – 10 பேர் கைது..!

கோவையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .இது தொடர்பாக அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது ..இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில், குனியமுத்தூர் உதவி கமிஷனர் அஜய், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை விற்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை கோவைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது . அந்த வாலிபர் கொடுத்த தகவல் என்பவரின் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரை கும்பலைச் சேர்ந்த மதுரை பேரையூரை சேர்ந்தபிரகாஷ் ( 30) கோவை கரும்புக்கடை முகமது நவ்பல் என்கிற கட்டத்துரை (29) முஜிப் ரகுமான் ( 29 ) ரிஸ்வான் சுகைல் (24) முகமது சபீர் ( 24 ) மன்சூர் ரகுமான் ( 27 ) முஜிபுர் ரகுமான் ( 22 ) அனீஸ் ரகுமான் ( 22 )சாஜிதீன் ( 27 ) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி, 7 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் 10 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். குஜராத்தில் இருந்து ஒரு மாத்திரையின் விலை ரூ. 30க்கு வாங்கி அதை கோவையில் ரூ. 300க்கு மேல் விற்பனை செய்து உள்ளனர். இந்த மாத்திரைகளை வாங்கும் கல்லூரி மாணவர்கள் அவற்றை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை வரவழைத்து உள்ளனர்..