போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.கோவை ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று கோவை மாநகர காவல் – ஊர்க்காவல் படை இணைந்து போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கியது . இதற்கான விழா கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்..
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் ரோகித் நாதன் ராஜகோபால்,சரவணகுமார், ஸ்டாலின், கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் சேகர், ஊர் காவல் படை பிரதேச தளபதி விக்னேஷ்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.