தமிழக பாஜக கட்சிக்கு புதிதாக 50,00,000 பேர் உறுப்பினர்கள் சேர்ப்பு..!

நாடு முழுவதும் தற்போது பாஜக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணி ஆதரவுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பிறகு தற்போது பாஜக கட்சிக்கு நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல முக்கிய பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பாஜக கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டிலும் பாஜக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக பாஜக கட்சிக்கு 50 ஆயிரம் லட்சம் உறுப்பினர்கள் புதியதாக சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக நேரடியாகவும் இணையதளம் வாயிலாகவும் இணைவதாக கூறினார். மேலும் அவர்கள் கட்சியில் பதிவு செய்து உறுப்பினர்களாக இணைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.