மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56-ம் ஆண்டு மிலாது விழா… வீடியோ இணைப்பு.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆம் ஆண்டு மிலாது விழா சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் உற்சாகமாய் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக
வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு
முகமது நபியின் 1498 ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் மிலாது திடலில் இரவு 8.45 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது,

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பங்குபெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியும்,மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் உள்ள மதரஸா பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் சூரா மனப்பாடப்போட்டி, வினாடி வினா போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், மற்றும் இஸ்லாமிய ஷாரியத்சட்டம் குறித்தும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கும் முதல் மூன்று கல்வி நிறுவனங்களுக்கும் பரிசுகள்ரும் வழங்கப்படுகிறது. மிலாது விழாவை முன்னிட்டு முஸ்லிம் லீக் அனைத்து மதரசா மாணவ, மாணவிகள் பங்கு பெறும் மிலாது விழா ஊர்வலம் காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் அனைத்துப் பள்ளி வாசல் உலமாக்கள் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் திரளான இஸ்லாமியர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில்
மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..