கோவை ஆர்.எஸ். புரம், பொன்னைய ராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40) நகை பட்டறை அதிபர் . இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணு வாசன் ( வயது 22 ) நகை பட்டறை தொழிலாளி. கடந்த 17ஆம் தேதி இரவு செந்தில்குமார் விஷ்ணுவாசன் ஆகியோர் காரில் வெளியே சென்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டனர். மறுநாள் சுதாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகன் மற்றும் தம்பியை காரில் கடத்தி விட்டோம்.. நாங்கள் தங்க நகை தயாரித்து தரச் சொல்லி இருந்தோம் .ஆனால்2 பேரும் சரியாக நகை செய்து கொடுக்கவில்லை. நகை குறைபாடாக இருக்கிறது. எனவே 2 பேரையும் விட வேண்டும் என்றால் ௹ 42 லட்சம் தர வேண்டும் என்று கூறினார்கள் .இது குறித்து சுதா ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில்குமார் விஷ்ணு வாசனை கடத்திச் சென்றது சிவகங்கையை சேர்ந்த தனபால், தனசேகர் என்பதும் கடத்தலுக்கு மேலும் சிலர் உதவியாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது .போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் சிவகங்கைக்கு விரைந்தனர் . அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கடத்தலில் ஈடுபட்ட தனபால் அவருக்கு உதவிய மாரிமுத்து, ஹரிஹரன், கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்,கார்த்திக் என்று குட் லுகார்த்திக்,கார்த்திக் ராஜா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.. அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட செந்தில்குமார்,விஷ்ணு வாசன்ஆகியோர் மீட்கப்பட்டனர்.