தஞ்சாவூர் கொலை வழக்கில் தேடப்பட்ட 6 பேர் சூலூர் நீதிமன்றத்தில் சரண்..!

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சோகுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளியில் முன் விரோதம் காரணமாக கடந்த 31ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில், பிரவீன், விஜய், கமல், குமரவேல், குடியரசன், ஆகிய 6 பேர் நேற்று கோவை அருகே உள்ள சூலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் .6 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.