கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபாஷ் வயது 40 கடந்த 16.6.2024 அன்று தனது நண்பர்களுடன் பெங்களூர் சென்று தங்க கட்டிகள் தங்க நகைகள் மற்றும் விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் சமயத்தில் 20 வயதிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க நான்கு பேர் சுபாஷ் வைத்திருந்த பேக்கை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக திருப்பூர் ரயில்வே போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர் . இந்தக் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்ய ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வி. வனிதா கடுமையான உத்தரவின் பெயரில் திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு முனைவர் டீ செந்தில்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வி. அன்பு சென்னை ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் கோயம்புத்தூர் போலீஸ் துணை சூப்பிரெண்ட் யூ. யாஸ்மின் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களோடு தனிப்படை அமைக்கப்பட்டது . இந்த தனிப்படையினர் தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையம் நிலையம் கடைகள் என சுமார் 300 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும் குற்றவாளிகளின் தொலைபேசி தொடர்புகளை வைத்து அவர்கள் யார் என்று கண்டுபிடித்து கொள்ளையர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளையில் ஈடுபட்ட கேடிகள் 1. ஸ்வான் பாணி சவான் வயது 22 தகப்பனார் பெயர் தானாஜி லட்சுமணன் 2. விஜய் குண்டல் க் ஜங்கிளி வயது 20 தகப்பனார் பெயர் குண்டல்க் சிவாஜி ஜ ங்கலி 3. அமர் பாரத் நிம் கிரி வயது 20 தகப்பனார் பெயர் பாரத் நிம் கிரி4. அனி கித் சுபாஷ் மனே வயது 23 தகப்பனார் பெயர் சுபாஷ் பாண்டே மணா 5. சைதன்யா விஜய் சிண்டே வயது 20 தகப்பனார் பெயர் விஜய் பல் குரூஸ் 6. கௌரவ மாருதி வாக் மேரி வயது19 தகப்பனார் பெயர் மாருதி வாக் மேரி ஆகியோர்களை சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் கொள்ளையர்களிடமிரு ந்து 595.14 கிராம் தங்க கட்டிகள் ரொக்க பணம் 10 லட்சத்து 10ஆயிரத்து 200 ரூபாய் மீட்கப்பட்டது கொள்ளையடிக்கப்பட்ட முழு தங்க கட்டிகளையும் ரொக்க பணத்தையும் தனிப்படையினர் மீட்டதை தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா பாராட்டு தெரிவித்தார்..