சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா சிக்கியது- கேரளா இளைஞர் கைது..!

சென்னை: சமீப காலமாக அமலாக்க துறையின் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜ் அவர்கள் தமிழகத்தில் எந்த இடங்களிலோ கஞ்சா மற்றும் குட்கா மற்றும் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் அடியோடு இருக்கக் கூடாது என்ற உத்தரவின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 வது பிளாட்பாமில் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா ரயில் வந்தடைந்தது. அப்போது சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரெண்ட் கர்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி முதல் நிலை காவலர் பிரகாசம் ஆகியோர் ரயிலை விட்டு இறங்கிய பயணிகளை சோதனை போட்டனர். சோதனையில் அஸ்கர்  வயது 22. தகப்பனார் பெயர் ரபினா பாலக்காடு கேரளா அவன் கையில் வைத்திருந்த ஏழு கிலோ கஞ்சாவை கைப்பற்றி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..