உயிர் காக்க ரத்த தானத்தை வலியுறுத்தி 7000 ஆயிரம் கொடையாளர்கள் சாதனை முயற்சி – கோவை கலெக்டர் உறுதிமொழி ஏற்பு..!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 7000 ஆயிரம் ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வ தொண்டு அமைப்பான அன்னை கரங்கள் நடத்திய நிகழ்வில் ரத்த தானத்தை வலியுறுத்தி ரத்த கொடைய அடையாளமாக இருதய வடிவில் நின்று புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்வில் கொடையாளர்களுடன் இணைந்து கலெக்டர் ரத்த தானம் செய்வோம், மனித உயிர்களை காப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து அன்னை கரங்கள் ஒருங்கிணைப்பாளர் கோபி முன்னிலையில் கொடையாளர்களுக்கு சான்றிதழும், பழங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..