நீலகிரியில் 71ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி- பழங்குடியினர் பங்கேற்பு.!!

நீலகிரி மாவட்ட உதகையில் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2024 முதல் 20.11.2024 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடைபெற்ற வார விழாவின் கடைசி நாளான 20.11.2024 கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நீலகிரி கூட்டுறவு நிறுவனம், கோத்தகிரி மலைவாழ் பழங்குடியினர் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றின் மூலம் கூட்டுறவு தயாரிப்புகளான அரசு
உப்பு, ஊட்டி டீ, பசுமை ஆயில், தேன், மங்கலம் மசாலா பொருட்கள், ஆவின் தயாரிப்புகளான நெய், பிஸ்கட், திருச்செங்கோடு வேளாண்மை
உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்புகளானd உளுந்து, ஆயில் சோப், சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தயாரிப்பான முழு உளுந்து, காதி தயாரிப்புகளான ப்யூரிட்டா மற்றும் குமரி குளியல் சோப் வகைகளும், கோத்தகிரி லேம்ப்ஸ் சங்கத்தின் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகாளான இயற்கை குளியல் சோப்பு வகைகளும் விற்பனை மேளாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இந்த விற்பனை மேளாவிற்கு நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின்
துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் சி.அய்யனார் தலைமை ஏற்று விற்பனை மேளாவை தொடங்கி வைத்தார். செ. கமல் சேட் அவர்கள் முன்னிலை வகித்தார். நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தின் கூட்டுறவு சார்பதிவாளர்மேலாண்மை இயக்குநர் திவ்யா வாழ்த்துரை
வழங்கினார், விற்பனை மேளாவில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் சுப்பிரமணி, கோவிந்தராஜ், ரா. கௌரிசங்கர் மற்றும் பொதுமேலாளர்
நீலகிரி கூட்டுறவு நிறுவனம,