கோவை சாய்பாபா காலனியில் 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்..!

கோவையில் குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டு கேமரா அறையை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.இதில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், உதவி போலீஸ் கமிஷனர் பசினா பிபீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்..