கோவை : இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நேற்று சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர் ரயில்வே பீடரரோட்டிற்கு விரைந்து சென்று குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் மதன்ராஜ் (26) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனமரம் மகன் மாதரம்(31) அரசூர் பகுதியை சேர்ந்த ராக்கியப்பன் மகன் சிவசாமி (48) மற்றும் சூலூர் பகுதியை நடராஜன் மகன் ராஜா (52)ஆகிய நபர்களை கைது செய்து 735 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் 4 சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
போதைப் பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அளித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல்அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.