இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நாட்களில் குடியரசு தினமும் ஒன்று 1950 இல் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவு கூறும் வகையிலும் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக மாறியதை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம் அவ்வகையில் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் செயல் அலுவலர் குடியரசு குடியை பறக்கவிட்டு மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேவராஜின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் உரங்கள் விற்பனை செய்ததன் மூலம் ஈட்டப்பட்ட வருவாயை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு 25 பேருக்கு மிக்ஸி வழங்கப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், மன்ற உறுப்பினர்கள் பசுமை நிழல் அமைப்பு நிறுவனர் விஜயகுமார், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..