தமிழகம் முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் – உயர்நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் அதிரடி உத்தரவு.!!

சென்னை: தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன் விவரம் வருமாறு: அரசு சொத்​தாட்​சி​யர் மற்​றும் நிர்​வாக அறங்​காவல​ராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், மயி​லாடு​துறை மாவட்ட நீதிப​தி​யாக​வும், சென்னை தொழிலா​ளர் தீர்ப்​பா​யம் நீதிபதி டி.சந்​திரசேகரன், செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதிப​தி​யாக​வும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.​முரு​கேசன், சென்னை 8-வது சிபிஐ நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.ஈஸ்​வரன், சென்னை 9-வது சிபிஐ நீதி​மன்ற கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

சென்னை 2-வது பெருநகர கூடு​தல் நீதிபதி எஸ்​.தஸ்​னீம், திரு​வள்​ளூர் மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும், சென்னை 16-வது பெருநகர கூடு​தல் அமர்வு நீதிபதி எல்​.ஆபிர​காம் லிங்​கன், வில்​லிபுத்​தூர் மகளிர் நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், செங்​கல்​பட்டு மாவட்ட கூடு​தல் அமர்வு நீதிபதி கே.​கா​யத்​ரி, வேலூர் விரைவு நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், சென்னை 5-வது குடும்​ப நல நீதி​மன்ற நீதிபதி எஸ்​.​காஞ்​ச​னா, திரு​வண்​ணா​மலை போக்​சோ வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதிப​தி​யாக​வும், கோவை மாவட்ட 3-வது கூடு​தல்அமர்வு நீதிபதி எஸ்​.பத்​மா, சென்னை போக்​சோ சிறப்பு நீதிப​தி​யாக​வும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல், செங்​கல்​பட்டு குடும்​பநல நீதி​மன்ற நீதிபதி எஸ்​.மலர்​விழி, பூந்​தமல்லி வெடிகுண்டு வழக்​கு​களுக்​கான சிறப்பு நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி கே.எச்​.இளவழகன், கரூர் மாவட்ட அமர்வு நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த மாவட்ட நீதிபதி ஆர்​.சண்​முகசுந்​தரம், சென்னை மாவட்ட முதலா​வது கூடு​தல் (தடா) அமர்வு நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த கூடு​தல் நீதிபதி கே.கீதா ராணி, சென்னை பெருநகர மூன்​றாவது கூடு​தல் நீதிப​தி​யாக​வும் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை மாவட்ட முதலா​வது கூடு​தல் (தடா) அமர்வு நீதிபதி ஆர்​.கே.பி.தமிழரசி, 4-வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி வி.​பாண்​டி​ராஜ் 6-வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.​முரு​கேசன், 7-வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதே​போல் தமிழகம்​ முழு​வதும்​ 77 அமர்​வு நீதிப​தி​கள்​ இடமாற்​றம்​ செய்​யப்​பட்​டுள்​ளனர்​.