சென்னையில் 7 வது ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொள்கின்றன 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியானது சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஆசியக் கோப்பை தமிழக முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது. இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டையில் சிறு விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூர்யகுமார் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் நகர மன்ற தலைவர் காவியா விக்டர் துணைத் தலைவர் இந்திரா பெரியாதாசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் டாக்டர் சேது ராஜன் மாவட்ட உடற்கல்வி அலுவலர் டாக்டர் குணசுந்தரி விளையாட்டரங்கு பொறுப்பாளர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..