ஓட்டலில் தொழிலாளர்களின் 8 செல்போன்கள் திருட்டு..!

புதுக்கோட்டை மாவட்டம், மணல் குடி பெருமருதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அய்யனார் (வயது 26) பெயிண்டிங் தொழிலாளி.  இவர் காந்திபுரம் 2 -வது வீதியில் உள்ள தங்கும் லாட்ஜில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதற்காக 3-வது தளத்தில் சக தொழிலாளர்களுடன் தங்கி உள்ளார் .இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இவர்கள் தூங்கிய பிறகு அங்கிருந்த 8 செல்போன்களை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த அய்யனார் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்..போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..