கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்..!

கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பேரூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கே. சுமதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கோவை மாவட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே. முருகன் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரகவும், பொள்ளாச்சி கிழக்கு பகுதி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ரத்தினகுமார் கோவை மாவட்டம் பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வடிவேல் குமார் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டரகவும், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டராகவும், கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த முத்துப்பாண்டி ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது..