ஆசீர்வதிப்பதாக கூறி 8000 ரூபாய் திருட்டு: திருநங்கை சிறையில் அடைப்பு – சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சகோதரி
கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி ஆர் ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (42). தொழிலதிபரான இவர் கடந்த சனிக்கிழமை மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்துச் செல்வதற்காக தனது காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காரின் அருகே ஸ்கூட்டரில் வந்த மூன்று திருநங்கைகள் மரிய பிரதிபின் காரை நோக்கி நடந்து வந்தனர் .தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். மரிய பிரதீப் தனது பர்ஸில் இருந்து 10 ரூபாய் எடுத்துக் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் ஒரு ரூபாய் நாணயம் கொடுங்கள் உங்களுக்கு ஆசீர்வதித்து தருகிறேன் என கூறியுள்ளனர். இதை அடுத்து மரிய பிரதீப் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து கொடுத்துள்ளார். அவர்கள் அதை வாங்கி ஆசீர்வதிப்பது போல ஆசீர்வதிப்பது போல செய்துள்ளனர் .அதன் பிறகு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்பதை மரிய பிரதிபர் உணர முடியவில்லை எனக் கூறப்படுகிறது .பின்னர் மரிய பிரதிபின் பர்சில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் மாயமாகியுள்ளது. சில நிமிடங்கள் கழித்து சுயநினைவிற்கு வந்த மரிய பிரதீப் பணம் காணாமல் போனது கண்டு திடுக்கிடுள்ளார். தொடர்ந்து மரிய பிரதீப் அந்த திருநங்கைகளை தேடிய போது அங்கு யாரும் இல்லை.தொடர்ந்து மரிய பிரதீப் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுண்டம்பாளையம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் இளவஞ்சி(40) என்ற திருநங்கை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் திருநங்கை இளவஞ்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து மரிய பிரதாப் பின் தங்கை மாயா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் இதை பார்த்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.