மளிகை கடையில் 85 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை ,வி. எஸ் .கே . நகர், 4 -வது வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் ( வயது 53 ) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..