கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது47) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 – ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது .அந்த மாணவியை சந்தித்த ஜெகநாதன் அவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் ஜெகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார்