திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா ( வயது 69) இவர் கடந்த 8- ஆம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில்இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி பேருந்தில் திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு பேருந்தில் திருடிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புலன் விசாரணையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சபரி மனைவி அமுதா (வயது 39) மற்றும் தமிழரசு மனைவி தேவயானி (வயது 23) மற்றும் முத்து மனைவி மீனா (வயது 37) ஆகியோர் மேற்படி பேருந்தில் திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து அவரிடமிருந்து திருட்டுப்போன நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த கும்பல் சென்னை அசோக் நகர், வடபழனி, ஜோலார்பேட்டை, உடுமலை, திருப்பூர் வடக்கு மற்றும் நாமக்கல் காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது..
பொள்ளாச்சி பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் செயின் பறிப்பு – 3 பெண்கள் கைது..!
