கோவையில் 2 பெண்ணிடம் 9பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..! கோவை பாப்பநாயக்கன்பாளையம்,பழையூர் ஜெய்சிம்மபுரத்தை சேர்ந்தவர் அசோகன்.இவரது மனைவி லதா (வயது 55) இவர் நேற்று காலையில் அங்குள்ளபால் பூத்தில் பால் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து லதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா வழக்கு பதிவு செய்துதேடி வருகிறார்இதேபோல கணபதி ருத்ரப்ப நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 58).இவர் நேற்று மதியம் 2 மணிக்குஅங்குள்ள ரோட்டில் தனது மகளுடன் அவரது தங்கை வீட்டுக்கு நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.இது குறித்து தாமரைச்செல்வி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் 2 பெண்ணிடம் 9பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!
