ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 9 பவுன் செயின் திருட்டு..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர்,ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரமணி ( வயது 55) இவர் உக்கடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இவர் பள்ளிக்கூடம் செல்வதற்காக டவுன் பஸ்சில் பயணம் செய்தார். ராமநாதபுரம் சந்திப்பில் வந்த போது இவரது கழுத்தில் இருந்த சிலுவையுடன் கூடிய 9 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர் .இது குறித்து ரமணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.