கோவை சிங்காநல்லூர்,கள்ளிமடையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனுவை கார்த்திகா ராணி ( வயது 63) இவர் நேற்று அங்குள்ள ரேஷன் கடை முன் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டான் .இது குறித்து கார்த்திகா ராணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!
