திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி உள்ளது. இங்கு சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். கற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர்கல்வி படித்து செல்கின்றன. சுற்றிலும் மலைப் பகுதி தொடர் மழை, மிகுந்த குளிர், சீரான சாலைகள் இல்லாத நிலை, அடிக்கடி மின் நிறுத்தம், ஆடலூர், பன்றிமலை போன்ற மலை கிராமங்களில் சரிவர பேருந்து வசதிகளும் கிடையாது. இது போன்ற கால சூழ்நிலையில் படித்து செல்லும் மாணவர்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே வந்து படித்து செல்கின்றன. இந்நிலையில் நகரத்தில் படிக்கும் மாணவர்களை விட பள்ளியில் பயன்ற 72 மாணவர்களுக்கு 70 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளது மிகவும் சிறப்பு. இந்த தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 531 மதிப்பெண் எடுத்து கலைச்செல்வி என்ற மாணவி பள்ளியில் முதல் இடத்திலும், 528 மதிபெண் பெற்று நேசிகா இரண்டாம் இடத்திலும், 525 மதிபெண் பெற்று பால்பாண்டி என்ற மாணவர் 3 ம் இடத்தையும் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதி மலை கிராம மக்கள் இதற்க்காக கல்வித் துறை, தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அனைத்து மாணவ – மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மேலும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் இருவர் குடும்ப சூழ்நிலை மற்றும் உடல்நிலை காரணங்களால் தோல்வி அடைந்து உள்ளதாக, என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் ஊர் மக்கள். அவர்களும் தேர்ச்சி பெற்று இருந்தால் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று எங்கள் ஊர் அரசு பள்ளி மாநிலத்தில் முன் மாதிரியான பள்ளியாக சாதனை படைத்திருக்கும்