கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவர் ரஷீத் ( வயது 37) இவரது கடையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வியாபாரி ரசீத் கைது செய்யப்பட்டார். .97கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது . இவருக்கு குட்கா சப்ளை செய்த முல்லாராம் என்பவரை தேடி வருகிறார்கள்.இருவரும் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் .இந்த புகையிலை பொருட்களை முல்லாராம் பெங்களூரில் இருந்து சிங்காநல்லூருக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவரை தேடி வருகிறார்கள்..
சிங்காநல்லூர் பழக்கடையில் 97 கிலோ குட்கா சிக்கியது – வடமாநில வியாபாரி கைது..!
