கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவர் சம்பவத்தன்று தனது பெற்றோரிடம் அருகில் உள்ள கடைக்கு
சென்று வருவதாக கூறி சென்றார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்
அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால்
அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை நெகமம் போலீஸ்
நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வந்தனர். விசாரணையில் அந்த சிறுமியின் செல்போன் சிக்னல் கேரள மாநிலம்
மலப்புரத்தை காட்டியது. போலீசார் உடனே அங்கு விரைந்தனர்.
பின்னர் அங்கு ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமியை
வாலிபர் ஒருவர் திருமணம் செய்து இருந்தது தெரியவந்தது. மேலும்
விசாரணையில் அந்த சிறுமிக்கும், அந்த சிறுமியை திருமணம் செய்த வாலிபர்
பரமசிவம் (21) என்பவருக்கும் ஷேர் செட் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது 2 பேரும் காதலித்துள்ளனர்.
அந்த சமயத்தில் பரமசிவம் ஆசைவார்த்தை கூறி கேரளாவிற்கு கடத்தி உள்ளார்.
அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரது
வீட்டுக்கு அழைத்து சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது
தெரிவயந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் நெகமம் அழைத்து வந்தனர். சிறுமி மாயம்
வழக்கை போக்சோ வழக்காக மாற்றி பரமசிவத்தை கைது செய்து சிறையில்
அடைத்தனர்