கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கோவை பாலு, பிரசாந்த் ஆகியோர் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், இரு பிரிவினர் இடையே மோதலை துண்டி விடும் வகையிலும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதனையடுத்து அவர்கள் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.