கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்த அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . மேலும் இரு பிரிவுகள் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த பாலு, பிரசாந்த் ஆகியோர் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்து வகையில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டனர் .இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் முத்து கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறாக பேசுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.