கோவை ஆனைகட்டி அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 25) அதே செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர் வெள்ளியங்கிரி (வயது 53) இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது .வெள்ளியங்கிரியின் மனைவி குறித்து ஜெயக்குமார் மற்றவர்களிடம் அவதூறாக பேசி வந்துள்ளார் .இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார் .இந்த நிலையில் கடந்த 1- 3 -20 21 அன்று இரவு இருவருக்கும் இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமாரை மரக்கட்டையால் தலையில் வெள்ளியங்கிரி அடித்துள்ளார் .மேலும் அவரது வாயிலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி பாலு குற்றம் நிரூபிக்கப்பட்ட வெள்ளிங்கிரிக்கு நேற்று ஆயுள்தண்டனையும், ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.