கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் காவலராக பணிபுரிந்தவர் வெங்கடாசலம் .இதேபோல கோவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் வெங்கடேஷ் .இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் கோவிலில் பணி புரிந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு படித்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2015 ஆண்டு பேரூர் போலீசில் வக்கீல் சுகந்த பிரியா புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 3) நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த வெங்கடாச்சலம், வெங்கடேஷ் ஆகியோருக்கு தாலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5 அபராதம் விதித்து உத்தரவிட்டார் .பின்னர் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.