மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது.
டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் காற்று மாசுபடுவதற்கு வாகனங்களில் இருந்து வரும் புகை ஒரு காரணமாக உள்ளது. இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும். மேலும் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும் என அதில் அவர் கூறியுள்ளார்.