கோவை அருகே உள்ள சூலூர் பகுதிகளில் குட்கா’ புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டிபோலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர். தனிப்படையினர் நேற்று சூலூர் பகுதியில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணபதிராம் (வயது 25) தினேஷ் ( வயது 20) ஹேமந்ராம் (வயது 32) மற்றும் கருமத்தம்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம்( வயது 22 )கலங்கல் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் ( வயது 47 )என்பதும் தெரிய வந்தது ..இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரை யும்கைது செய்தனர். காரில் இருந்த 502 கிலோ குட்காவும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது .இவர்கள் 5பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.