கோட்டை மேடு வின்சென்ட் ரோடு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த 93 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது. இதில் பள்ளி வளாகத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்து இடர்பாடுகளிடையே சிக்கியது. மேலும் அருகே இருந்த இரண்டு வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் இல்லை. உடனடியாக அப்பகுதி மக்கள் கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த 93 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது..!
