குன்னூர்: கார் வெடிப்பில் பலியான முபினுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார். இவருடன், முபின் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குன்னூர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர் முபினுக்கு கார் வாங்கி கொடுத்ததில் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. பிடிபட்ட ஆட்டோ டிரைவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூரில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். முபினுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு அவர் குன்னூரில் தங்கியிருந்தாரா, மலைப்பிரதேசமான அங்கு ரகசிய கூட்டம் எதுவும் நடத்தப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.