கோவையில் இருதரப்பினர் இடையே தகராறு: நடுரோட்டில் வாலிபரை அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற நபர்கள் – போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் திருச்சி சாலையில் பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இந்நிலையில் இன்று காலை பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த திருச்சி சாலையில் திடீரென பாழடைந்த கட்டடத்தில் இருந்து வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் ஓடி வந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .ரத்த காயங்களுடன் சாலையில் சரிந்து விழுந்த வாலிபரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் அந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் உள்ளே சென்று பார்த்தனர் .மேலும் வாலிபரை வெட்டியதாக கூறப்படும் நபர் ஒருவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டுப்பட்ட வாலிபர் ஒலம்பஸ் 80 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜா (30) என்பது தெரியவந்தது. அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வருகின்றனர். இரு தரப்பினர் இடையே மோதல் எதனால் ஏற்பட்டது எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது. என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.