கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 36) அங்குள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ராதாகிருஷ்ணன் ரோட்டில் சென்ற போது 2 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர் .பின்னர் அவரிடம் இருந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து சுரேஷ் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்த லாரன்ஸ் (வயது 25) சுந்தராபுரம், எஸ்.பி. டவரை சேர்ந்த விஜய் (வயது 27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.