கேரளா லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒருவர் கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது இதை எடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சபரி என்பதும் கோவை பா.ஜ.க இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது