கோவை : ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை யொட்டி இன்று ( செவ்வாய்க்கிழமை) வழக்கத்தை விட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார், புறநகரில் ஆயிரம் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான கிராஸ் கட் ரோடு ,காந்திபுரம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி. ராஜவீதி, பெரிய கடைவீதி,ஆர். எஸ். புரம் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களையும் சோதனை செய்கிறார்கள்.கோவையில் உள்ள 11 சோதனை சாவடிகளில் நேற்று இரவு விடிய ‘விடிய வாகன சோதனை நடந்தது. கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளூர் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம் உக்கடம் பஸ் நிலையம் ,சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் உள்ள கோனியம்மன் ,தண்டு மாரியம்மன் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில்,ஈச்சனாரி கோவில் ,பேரூர் கோவில் மருதமலை முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள் தேவாலயங்கள் ,மசூதிகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ரயில் நிலையத்தில் உள்ள பார்சல்கள் உள்ளிட்டவை அனைத்தும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். மெட்டல்டிடெக்டர் சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ,அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ். எப்) தீவிர கண்காணிப்பபணியில் ஈடுபட்டுள்ளனர் .இது தவிர முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள், மேலும் கோவையில் இரவு முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடந்தது .கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடிப்பு சம்பவத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பை கண்டித்து இன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டன நடத்தினார்கள்.