கோவை மாவட்ட தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் போலீசார் நேற்று பாப்பம்பட்டி திருமுருகன் நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1532 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த காருக்கு பைலட்டாக வந்த ஒரு பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த எஸ் .எஸ். குளம், குரும்பபாளையத்தை சேர்ந்த டிரைவர் சிவகுமார் ( வயது 39 ) சவுரிபாளையம் சுதாகரன் (வயது 42) இருகூர் ,பூங்கா நகரை சேர்ந்த செல்வகுமார் (வயது45 ) சூலூர், செலக்கரைசல்,மளிகை வியாபாரி குருநாதன் ( வயது 49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கைப்பற்றப்பட்ட குட்கா மதிப்பு ரூ.16,14,052 ஆகும்.காரின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். பைக் மதிப்பு ரூ25 ஆயிரம் ஆகும்.இவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பட்டேல் என்பவரிடமிருந்து குட்கா வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.