சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்று பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் டாப் 10ல் இடம் கிடைத்துள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகிக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலக்கட்டத்தில் அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன. அதாவது அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது.
மாறாக அமைச்சரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறப்பேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின் அறையின் வாயிலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த துறை மெய்யநாதன் நிர்வகித்தார். தற்போது அவரிடம் இருந்து அந்த துறை பறிக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் 10வது இடம் கிடைத்துள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.