90 நாட்களில் 87 கோடி பேருக்கு கொரோனா பரவும்.. பல லட்சம் பேர் செத்து மடிவார்கள்…நோயியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் ..!!

பெய்ஜிங்: சீனாவில் அடுத்த 90 நாட்களில் 87 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்றும் அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கடந்த ஒன்றரை மாதமாக பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனால் தொற்றின் வேகம் அதிகரித்து ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேர் மடிந்து வருகின்றனர். சீன தொற்று நோயியல் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் உயிருக்கு போராடி வருவது உறுதியாகி உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மயானங்களில் சடலங்களை அடக்கம் செய்யும் பணி 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மயானத்திலும் நாளொன்றுக்கு 2,000 சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன.

ஆனால் இதை முற்றாக மறுத்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மறுபுரத்தில் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொற்று வேகமாக பரவுவதால் 90 நாட்களில் 87 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படுவதையும், பல லட்சம் பேர் மடிவதையும் உலகம் பார்க்கும் என்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.