பொள்ளாச்சி தாலுகா போலீசார் நேற்று மாலைகுள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 35 )பொள்ளாச்சி அழகுபுரி வீதியை சேர்ந்த பூபதி ( வயது 61)என்பது தெரிய வந்தது. கஞ்சாவும், பைக்கும், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..