கோவை, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இன்று இரவில் அவர் கோவையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை 25-ந் தேதி (ஞாயிறு)காலை 10 மணிக்கு நேரு ஸ்டேடியம் செல்கிறார். அங்கு ரூ.7 கோடி செலவில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டினை ரசிக்கும் திறந்த வெளி கேலரியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். 400 மீட்டர் சிந்தெட்டிக் பாதை, மின்னொளி கால்பந்து மைதான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் . மேலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் அறையையும் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 10-30 மணிக்கு அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆலோசனை முடிந்ததும் 12 மணிக்கு காரில் கொடிசியாவுக்கு செல்கிறார். கொடிசியா மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அப்போது மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி, தென்னை தொழிலாளர்களுக்கு கடனுதவிகளையும் வழங்குகிறார்.
இதுதவிர கலைஞர் ஒருமைப்பாட்டு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனையொட்டி கொடிசியா மைதானத்தில் மிகபிரமாண்டமான அளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதுதவிர அங்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமருவதற்கு நாற்காலி போடும் பணியும் நடக்கிறது. இதுதவிர அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலும் உதயநிதி வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வருகையால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவருக்கு மிகப்பிரம்மாண்டமான அளவில் வரவேற்பு அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.
[கோவை நேரு ஸ்டேடியத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் திறந்து வைக்கிறார்கோவை டிச 23 கோவை, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் நாளை(சனி) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அன்று இரவு அவர் கோவையில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நேரு ஸ்டேடியத்தில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டினை ரசிக்கும் திறந்த வெளி கேலரியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். 400 மீட்டர் சிந்தெட்டிக் பாதை, மின்னொளி கால்பந்து மைதான பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் அறையையும் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனை முடிந்ததும் நேராக காரில் புறப்பட்டு கொடிசியாவுக்கு செல்கிறார். கொடிசியா மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அப்போது மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி, தென்னை தொழிலாளர்களுக்கு கடனுதவிகளையும் வழங்குகிறார். இதுதவிர கலைஞர் ஒருமைப்பாட்டு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனையொட்டி கொடிசியா மைதானத்தில் மிகபிரமாண்டமான அளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அங்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமருவதற்கு நாற்காலி போடப்பட்டுள்ளது இதுதவிர அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.